Sunday, May 31, 2009

கூட்டம்


முன்னேற்பாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

முன்னேற்பாட்டுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் தமி்ழ்ச்சங்கமாக விளங்கும் சன்மார்க்கசபையின் நூற்றாண்டு நிறைவு விழா இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. விரிவான ஏற்பாடுகள் அதற்காக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சன்மார்க்க சபையின் ஓர் அங்கமான கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஓர் அமைப்பு உருவாக்கப் பெற்றுள்ளது. இவ்வமைப்பின் தலைவராக திரு.மு. திருநாவுக்கரசு அவர்களும், செயலராக திரு. அ. கருப்பையா அவர்களும், பொருளாளராக முனைவர் க. கனகராசு அவர்களும் இருந்துச் செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வமைப்பின் முன்னேற்பாட்டுக் கூட்டம் இந்த ஞாயிற்றுக்கிழமை (31,05,2009) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொறுப்பாளர்களும்- சன்மார்க்கசபை மற்றும் முழுநேர-பகுதிநேர கல்லூரிகளின் தலைவர்-செயலர் போன்றோர்களும்-கல்லூரி முதல்வர் முனைவர் தா. மணி அவர்களும் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் 1, முன்னாள் மாணவர்களை விரைவில் ஒருங்கிணைப்பது
2, இவ்வமைப்பு சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை கூடுவது
3, கருத்தரங்குகள் நடத்துவது-
4. பரிசு வழங்குவது
முதலான பல திட்டங்கள் ஏற்படுத்தத் தீர்மானிக்கப் பெற்றது,
இதனைக் காணும் முன்னாள் மாணவர்கள் கல்லூரியைத் தொடர்பு கொண்டு தங்கள் பதிவைச் செய்து கொள்ள வேண்டுகிறோம்