Sunday, May 31, 2009

முன்னேற்பாட்டுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தின் தமி்ழ்ச்சங்கமாக விளங்கும் சன்மார்க்கசபையின் நூற்றாண்டு நிறைவு விழா இவ்வாண்டு செப்டம்பர் மாதத்தில் கொண்டாட திட்டமிடப்பட்டு வருகிறது. விரிவான ஏற்பாடுகள் அதற்காக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சன்மார்க்க சபையின் ஓர் அங்கமான கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஓர் அமைப்பு உருவாக்கப் பெற்றுள்ளது. இவ்வமைப்பின் தலைவராக திரு.மு. திருநாவுக்கரசு அவர்களும், செயலராக திரு. அ. கருப்பையா அவர்களும், பொருளாளராக முனைவர் க. கனகராசு அவர்களும் இருந்துச் செயல்பட்டு வருகிறார்கள்.
இவ்வமைப்பின் முன்னேற்பாட்டுக் கூட்டம் இந்த ஞாயிற்றுக்கிழமை (31,05,2009) அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொறுப்பாளர்களும்- சன்மார்க்கசபை மற்றும் முழுநேர-பகுதிநேர கல்லூரிகளின் தலைவர்-செயலர் போன்றோர்களும்-கல்லூரி முதல்வர் முனைவர் தா. மணி அவர்களும் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் 1, முன்னாள் மாணவர்களை விரைவில் ஒருங்கிணைப்பது
2, இவ்வமைப்பு சார்பாக ஆண்டுக்கு ஒருமுறை கூடுவது
3, கருத்தரங்குகள் நடத்துவது-
4. பரிசு வழங்குவது
முதலான பல திட்டங்கள் ஏற்படுத்தத் தீர்மானிக்கப் பெற்றது,
இதனைக் காணும் முன்னாள் மாணவர்கள் கல்லூரியைத் தொடர்பு கொண்டு தங்கள் பதிவைச் செய்து கொள்ள வேண்டுகிறோம்

11 comments:

mohanasundaram said...

சன்மார்க்க சபையோருக்கும் அதன் முன்னாள் இன்னாள் மாணவருக்கும் எனது இனிய வணக்கம்.
தமிழ் எவ்வளவு உயர்வானதோ, புனிதமானதோ, அதற்கு இணையாய் அமைந்தது நம் சன்மார்க்க சபை.

நான் அருகில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் காலத்தில் சன்மார்க்க சபையில் நடைபெற்ற பல விழாக்களில் பல பெரியவர்களின் சொற்பொழிவைக்கேட்டிருக்கின்றேன்.

நிதானமான, சாந்தமான, உண்மையான, அறிவுபூர்வமான,இலக்கிய நயமிக்க, எளிமையான பல சொற்பொழிவுகள் என்னுள் ஏற்படுத்திய ஆனந்தம் அளவிடற்கரியது.

இந்த வலைப்பதிவை தன்னிச்சையாகப்பார்த்ததும் பெரும் மகிழ்வுற்றேன். தமிழ் வளர்க்க இதை மேலும் ஒரு தளமாக பயன்படுத்துங்கள்.

வாழ்க சன்மார்க்க சபை.
வாழ்க மாணவர் சமுதாயம்.

அன்பன்:
ந.மோகனசுந்தரம், திருநெல்வேலி(வேந்தன்பட்டி)
email: plnmohanasundaram@yahoo.com
email: plnmohanasundaram@gmail.com

mohanasundaram said...
This comment has been removed by the author.
mohanasundaram said...

melasivapuri pincode is: 622 403

mohanasundaram said...
This comment has been removed by the author.
Unknown said...

P.Ilayaraja (Melur)from Sharjah,UAE

Hi All,
I'm very happy to see our college profile on net.we are 1995-98 batch.
I welcome all of my friends and lecturers to join in this historic moment.

P.Ilayaraja
Sharjah
raja@ae.embeegroup.com
ilaya2raja@gmail.com
mob:00971-50-7459508

Unknown said...

Ilayaraja from sharjah.

Can anybody give me the Contact number or mail id of our college.

I'm waiting for that.

palaniappan said...

thank u for ur commands
we think to arrange one function in few months becase 100th year celebration will come. so we can join with us
please contact the pone no. 9442041768
dr.k.kanakaraj

Unknown said...

Ilayaraja from Sharjah,
Thanks Mr.Palaniappan for your info.

Unknown said...

Can i have the contact number of Mr.Syed abuthahir (Natham)-Economics Lecturer.

palaniappan said...

he worked at natam college
he went from this college

போ. மணிவண்ணன் said...

தமிழை எனக்கு தந்து என்னை தமிழுக்கு தந்த நான் பயின்ற கல்லூரி.
வணங்குகிறேன்.
பெருமையடைகிறேன்.
இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.

Post a Comment